How to know rasi natchathiram patham free astrology in Tamil

Natchathiram patham and Rasi in astrology Tamil

பொதுவாக ராசி மண்டலத்தில்  12   ராசிகளும் 27  நட்சத்திரங்களும்  மற்றும் ஒவ்வொரு  ராசிகளும் 9  பாதங்களை  கொண்டுள்ளது. ஒரு நட்சத்திரம் என்பது 4 பாதங்களை கொண்டது. ஒரு ராசி என்பது 2 1/4  நாட்களை  கொண்டது. அதாவது மேஷம் முதல் மீனம் வரை  உள்ள  நட்சத்திர பாதங்கள் மொத்தம் (27 நட்சத்திரங்கள் X 4 பாதங்கள்=108 பாதங்கள்)  ஆகும்.rasi natchathiram tamil

ஒவ்வொரு ராசியையும்  அதன் நட்சத்திரத்தையும் கொண்டு  ஒன்பது  பாதங்களாக பிரிக்கப்பட்டு   கீழே  விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. (free astrology)

Natchathiram Patham in free Astrology tamil

நட்சத்திரங்கள் ராசிகள் ராசி அதிபதி
அஸ்வினி 1,2,3,4 / பரணி 1,2,3,4 / கிருத்திகை 1 மேஷம்  செவ்வாய்
கிருத்திகை 2,3,4 / ரோகிணி 1,2,3,4 / மிருகசீரிஷம் 1, 2 ரிஷபம்  சுக்கிரன்
மிருகசீரிஷம் 3,4 / திருவாதிரை 1,2,3,4 / புனர்பூசம் 1,2,3 மிதுனம்  புதன்
புனர்பூசம் 4 / பூசம் 1,2,3,4 / ஆயில்யம் 1,2,3,4 கடகம்  சந்திரன்
மகம் 1,2,3,4 / பூரம் 1,2,3,4 / உத்திரம் 1 சிம்மம் சூரியன்
உத்திரம் 2,3,4 / அஸ்தம் 1,2,3,4 / சித்திரை 1,2 கன்னி  புதன்
சித்திரை 3,4 / சுவாதி 1,2,3,4 / விசாகம் 1,2,3 துலாம்  சுக்கிரன்
விசாகம் 4 / அனுஷம் 1,2,3,4 / கேட்டை 1,2,3,4 விருச்சகம்  செவ்வாய்
மூலம் 1,2,3,4 / பூராடம் 1,2,3,4 / உத்திராடம் 1 தனுசு  குரு
உத்திராடம் 2,3,4 / திருவோணம் 1,2,3,4 / அவிட்டம் 1,2 மகரம்  சனி
அவிட்டம் 3,4 / சதயம் 1,2,3,4 / புரட்டாதி 1,2,3 கும்பம்  சனி
புரட்டாதி 4 / உத்திரட்டாதி 1,2,3,4 / ரேவதி 1,2,3,4 மீனம்  குரு

Natchathiram Patham diagram in astrology tamil :

how to know nakshatra padam from date of birth

நட்சத்திர பாதம் – சூரியன் : (nakshatra padam tamil)

சூரியன் ஒவ்வொரு ராசியும் கடக்க  ஒரு மாதம் காலம் எடுத்துக் கொள்கிறது.  ஒரு ராசி என்பது 30 டிகிரி  ஆகும். அப்படியாக12 ராசிகளையும் 12 மாதங்கள் கடந்து சென்று  ராசி மண்டலம் 360 டிகிரியை சுற்றி வருகிறது. பொதுவாக சூரியனைச் சுற்றித்தான் பூமி உட்பட அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன.   அதனால் ஜோதிடத்தில் பூமியைச் சுற்றி தான் சூரியன் உட்பட அனைத்து கிரகங்களும் சுற்றி வருவதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய ஜோதிட முறையில் மேஷ ராசி முதல் மீன ராசி வரை உள்ள  ராசிகளை  சூரியன் கடந்து செல்ல ஒவ்வொரு ராசியையும் தமிழ் மாதங்களைக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.  rasi natchathiram tamil

ஒவ்வொரு ராசியிலும் தமிழ் மாதமான  சித்திரை , வைகாசி, ஆணி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி  போன்ற 12 மாதங்களைக் கொண்டு சூரிய உதயம் ஆகிறது.  இதைக் கொண்டுதான் பாரம்பரிய முறையில் லக்னம் கணிக்கப்படுகிறது. சூரிய உதயத்தின் அடிப்படையில் பஞ்சாங்கத்தை கொண்டு லக்னத்தை கணிக்கும்போது எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரப் பாதத்தில் உள்ளது என்பதை நிர்ணயம் செய்யப்படுகிறது.  பாதம் என்பது  நட்சத்திரத்தின்  உட்பிரிவுகள் ஆகும். பாரம்பரிய முறையில் பாதத்தை கொண்டு தான் லக்னத்தை மிகத்துல்லியமான முறையில்  கணக்கிட முடியும். how to know nakshatra padam from date of birth

நட்சத்திர பாதம் – சந்திரன் :

ஜோதிட முறையில்  சந்திரனுக்கு மிக முக்கியத்துவம்  உள்ளது.  சந்திரனைக் கொண்டுதான் தசா-புத்திகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.  அதாவது  ஒரு குழந்தை பிறக்கும் போது  சந்திரன்  பயணம் செல்லும் ராசி, நட்சத்திரம் மற்ற நட்சத்திர பாதம் ஆகியவற்றைக் கொண்டுதான் ஜாதகம்  எழுதப்படுகிறது. rasi natchathiram tamil

 சந்திரன் ஒவ்வொரு  நாளும்  ஒவ்வொரு நட்சத்திரத்தில் பயணம் செல்வர்.  இதில் நட்சத்திரத்தை நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு அதில் எந்த பாதத்தில் பயணம் செல்கிறாரோ அதுவே நட்சத்திர பாதம் ஆகும். இதை வரைபடத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த பதிவில் நட்சத்திர பாதத்தை பற்றி தெரிந்துகொண்டோம்.

மேலும் நட்சத்திர பாதத்தின் விவரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

Jathagam parpathu eppadi in tamil :


நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள்  லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.