How to know dasa bhukti calculator and predictions in Tamil astrology

What is Vimsottari Dasa Bhukti calculator Periods – 120 Years

ஜோதிடத்தில்  தசை-புத்தி வருடங்கள் dasa bukthi calculator மிக முக்கியமானது. சந்திரனின்  பயணம் செல்லும்  ராசி, நட்சத்திரம் ஆகியவற்றின் நிலையைக் கொண்டுதான் தசா-புத்திகள்  கணக்கிடப்படுகிறது.  ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுள் காலம் 120 வருடங்கள் தசா-புத்திகள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால்  ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 வருடங்கள் நடைமுறையில் சாத்தியமில்லை.

ஜோதிட துறையில் 42 வகையான தசா புத்தி  முறைகள் (system) உள்ளன.  பாரம்பரிய ஜோதிட  முறையிலும்  மற்றும் கேபி ஜோதிட (KP astrology) முறையிலும் மிக பிரபலமான  தசா முறையான விம்சோத்தரி தசா முறையை பின்பற்றப்படுகிறது. இந்த விம்சோத்தரி தசா முறையில் ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 வருடங்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜோதிடத் துறையில் உள்ள 42 வகையான தசா முறைகளை (Dasa system) கீழ்கண்டவாறு பார்க்கலாம்.

1. Vimshottari Dasa 2. Shodashottari Dasa 3. Varnada Dasa  4. Ashtottari  5. Dvadashottari  6. Rashyansha Dasa  7. Panchottari  8. Chaturashiti  9. Kendra  10. Dwisaptati  11. Nakshatra  12. Shastihayani  13.  Shattrimshat  14. Navamsa sthira  15. Nakshatraadrashi  16. Navamsa Navadasa 17. Kala 18. Chakra  19. Karaka Graha   20. Kalachakra  21. Sudarshana Chakra  22. Chara Paryaya  23. Sthira  24. Chaturvidha Uttara  25. Brahma Grahaashrita  26. Karakendra  27. Manduka  28.  Shula  29. Yogardha  30. Drg  31. Trikona  32. Tara  33. Varnada  34. Panchasvara  35. Yogini  36. Pinda  37. Amsa  38. Rashmi  39. Nisarga  40. Ashtakavarga  41. Sandhya  42. Pachaka.

மேற்கொண்ட தசாபுத்தி முறைகளில் 4  முறைகள் மட்டும் நடைமுறையில் உள்ளது.  மேலே உள்ள தசா முறைகளில் ஒவ்வொரு முறையிலும் தசா காலங்கள் வேறுபடும். இதில் மிக பிரபலமான  விம்சோத்தரி தசா முறை தான் அதிகமாக ஜோதிடத்தில் பயன்படுத்தப்படுகிறது.

Vimsottari Dasa-Bhukti Periods – 120 Years:

dasa bukthi calculator in tamil
dasa periods in tamil

Jathagam parpathu eppadi :

நட்சத்திரம், நட்சத்திர அதிபதிகள், தசா வருடங்கள்:

astrology online

 மேஷம் to கடகம் நட்சத்திரங்கள் சிம்மம் to விருச்சகம்
நட்சத்திரங்கள்
 தனுசு to  மீனம் நட்சத்திரங்கள் நட்சத்திரத்தின் அதிபதி தசா காலங்கள்
அஸ்வினி மகம் மூலம் கேது 7 வருடம்
பரணி பூரம் பூராடம் சுக்கிரன் 20 வருடம்
கிருத்திகை உத்திரம் உத்திராடம் சூரியன் 6 வருடம்
ரோகிணி அஸ்தம் திருவோணம் சந்திரன் 10 வருடம்
மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் செவ்வாய் 7 வருடம்
திருவாதிரை சுவாதி சதயம் ராகு 18 வருடம்
புனர்பூசம் விசாகம் புரட்டாதி குரு 16 வருடம்
பூசம் அனுஷம் உத்திரட்டாதி சனி 19 வருடம்
ஆயில்யம் கேட்டை ரேவதி புதன் 17 வருடம்
120 வருடங்கள்

அதாவது ஒருவர் பிறக்கும்போது  அன்றைய தேதியின்படி சந்திரன் எந்த ராசியில் மற்றும் எந்த நட்சத்திரத்தில்  இருக்கிறாரோ அதுவே ஒருவரின் ஆரம்ப திசை காலமாகும். ஜோதிடத்தில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களை கொண்டு சந்திரன் பயணம் செல்லும்  நட்சத்திரத்தைப் பொறுத்து தசா காலங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக அஸ்வினி, மகம்  மூலம் ஆகிய  நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்  கேது திசையில் ஆரம்பகால திசையாகும்.

கேது திசை என்றால் ஏழு வருடங்கள். பாரம்பரிய ஜோதிட முறையில் தசை-புத்தி காலங்களான ஆரம்பம், மத்தியில், முடிவில் என்று எங்கு தொடங்குகிறது என்பதை  பாதங்களை கொண்டு கணக்கிடப்படும்.  ஒரு ராசியின் அளவு 30 டிகிரி, நட்சத்திரத்தின் அளவு 13 டிகிரி 20 நிமிடங்கள் மற்றும் பாதத்தின் அளவு 3 டிகிரி 20  நிமிடங்கள்  அளவை கொண்டது.

உதாரணமாக  பாரம்பரிய ஜோதிட முறையில் அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது ஆகும்.  எனவே கேதுவின் ஆரம்பகால திசையாக இருக்கும். கேது திசை –  7 வருடங்களை எடுத்துக்கொண்டால், கேது  திசையின்

 ஒன்றாம் பாதம்  என்றால் கேதுவின் திசை காலம் முழுவதுமாக இருக்கும்

 இரண்டாம் பாதம் என்றால் கேதுவின் திசை காலம்   மத்திம காலங்களில் துவங்கும்

 மூன்றாம் பாதம்  என்றால் கேதுவின் திசை காலம் மத்திமம் காலங்களில் துவங்கும்

 நான்காம் பாதம்  என்றால் கேதுவின் திசை காலம் முடிவு காலங்களில் துவங்கும்.

 நட்சத்திர அதிபதியின் தாச  காலங்களின் வருடங்களை பொருத்து புத்தி கணக்கிடப்படும்.   புத்தி என்பது தசையின்  உட்பிரிவு. ஒருவர் பிறக்கும்போது நட்சத்திர பாதத்தை பொருத்து அவரது தசா-புத்தி இருப்பு கண்டறியப்படும். மேலும் பஞ்சாங்கத்தின் அடிப்படையில்  சந்திரன் பயணம் செல்லும்  நேரத்தைக் கொண்டு தசா-புத்திகள் கணக்கிடப்படும். ஜாதக புத்தகத்தில்  பார்க்கலாம் தசை இருப்பு குறிப்பிட்டிருக்கும். இவ்வாறாக ஜோதிடத்தில் dasa bhukti calculator  மூலம் தசைகள் மற்றும் புத்திகள் கணக்கிடப்படுகிறது.

Note : கே பி ஜோதிட முறையில்  விம்சோத்தரி தசா புத்தி 120 வருடங்களை  எவ்வாறு கணக்கீடுகள் மூலம் பிரிக்கப்பட்டது என்பதை  வேற பதிவுகளில்  பார்க்கலாம்.


நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள்  லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.