HOW TO KNOW CHANDIRAN IN TAMIL ASTROLOGY- KP ASTROLOGY IN TAMIL

Moon other names in Tamil :

The following of five words most popular and well known about moon : moon other names in Tamil

மதி (mati),

திங்கள் (tingal),

 நிலா (nilā), 

அம்புலி (ambuli), 

சந்திரன் (chandiran)

சந்திரனின் (MOON) கிரக காரகங்கள்:

கேபி ஜோதிடத்தில் (Kp astrology) சந்திரனை தாய் காரகன் என்றும் மனோகாரகன் என்றும்  உடல் காரகன் என்றும்  குறிப்பிடப்படுகிறது. சூரியனை உயிருக்கு  காரகன் என்றால் சந்திரனை உடலுக்கு   காரகனாவார். மூளை என்பதற்கு காரகன் சூரியன் என்றால் அந்த மூலையில் செயல்படும்   எண்ணம் ஓட்டங்களுக்கு சந்திரன் காரகனாவார்.  எனவே சந்திரனை மனோகாரகன் என்று அழைக்கப்படுகிறது. குடும்ப பொறுப்புகளுக்கு   குடும்பத்தலைவர்  (சூரியன்)  தந்தையாவார். அதேபோல் குடும்ப பொறுப்புகளை வழிநடத்துபவர் குடும்பத்தலைவி (சந்திரன்) தாய்  அவர்.  இதனால்தான் சந்திரனை தாய் காரகன் என்று அழைக்கப்படுகிறது. moon other names in Tamil

சந்திரன் பூமியிலிருந்து 384,400 km தொலைவிலிருந்து சுற்றி வருகின்றது. சந்திரனின் விட்டம் 3,474.2 km அளவைக் கொண்டது.  சந்திரன் தன்னைத் தானே 27  நாட்கள்,  8 மணி நேரத்தில்   சுற்றிக் கொள்கிறது.  இது பூமியை 29  நாட்கள், 12  மணி நேரம், 44 நிமிடத்தில் ஒரு முறை சுற்றி வருகிறது.

சந்திரன் என்பது பூமியின் துணைக்கோள் ஆகும்.  சூரியனை சுற்றி மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன. ஆனால் சந்திரன் மட்டும் பூமியைச் சுற்றி வருகின்றது. அறிவியல் பூர்வமாக சந்திரனை  கிரகமாக கருதப்படவில்லை. சந்திரன் மற்ற கிரகங்கள் இடமிருந்து கதிர்வீச்சை பெற்று பூமிக்கு அனுப்புகிறது. இதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை கிரகமாக கருதப்படுகிறது.

கிரகங்களிலேயே ராசி மண்டலத்தை அதிவிரைவாக சுற்றி வரும் கிரகம் சந்திரன் ஆவார்.  எனவே விரைவான செயலுக்கு  சந்திரன் காரகனாவார். சந்திரன் எந்த ராசியில் உள்ளதோ அந்த ராசியை ஜென்ம ராசி என்றும் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அது ஜென்ம நட்சத்திரம் என்றும் அழைக்கிறோம்.

ABOUT MOON - கிரக காரகங்கள் - KP ASTROLOGY IN TAMIL

 சந்திரனின்  காரகங்கள் : (KP ASTROLOGY IN TAMIL)

  • உறவுமுறையில்  தாயையும், தாய் வர்க்கத்தினரையும், மாமியார், அத்தை, அண்ணி, மூத்த சகோதரி  ஆகிய அனைவரும் சந்திரனின் காரகங்கள் ஆகும்.
  • வெளிநாட்டு பயணங்களுக்கும், இடமாற்றத்திற்கும், வாழ்க்கையில்  அடிக்கடி ஏற்படும் மாற்றத்திற்கும்  சந்திரனே காரகனாவார்.
  • நீர் கிரகம் என்பதால் ஏரி, குளம், குட்டை, ஆறு, கிணறு, கடல் போன்ற நீர் நிலைக்கு சந்திரன் காரகனாவார்.
  • உடலுக்கு காரகன் என்பதால் உடலிலுள்ள எல்லா பகுதிகளுக்கும் உள்ள நீர் தன்மையான ரத்தத்திற்கு சந்திரன் காரகனாவார்.
  • வெள்ளை நிறத்துக்கு காரணம் என்பதால் உணவு பொருட்களில் பால், தயிர், அரிசியை குறிக்கும்.
  • சந்திரனின் காரணங்களான அமைதியான தோற்றம், மனக்குழப்பங்கள், மன பேதலிப்பு, பைத்தியம், குளிர்ச்சி, சளி, சீதள நோய்கள், ரத்த அழுத்த நோய்கள், அமிலம், நீர்வாழ் உயிரினங்கள், சுறுசுறுப்பு, வெண்பட்டு, வெண்குடை, இரவு பொழுது, உணவு விடுதிகள் தெய்வங்களில் பார்வதி, அம்சம் போன்றவைகள்  காரணமாகும்.
  • சந்திரன் வளர்பிறை, தேய்பிறை என்ற இரு நிலைகளில் தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறார். வளர்பிறை சந்திரன் சுப தன்மை கொண்டதாகும் தேய்பிறை சந்திரன் அசுப தன்மை கொண்டதாகும் கூறப்படுகிறது.  இது பெருமளவு நடைமுறையில் ஒத்துப்போகிறது.
  • குணங்கள் : சலனம், கற்பனை, கொள்கை பிடிப்பு, சாந்தம், சகிப்புத் தன்மை, நாபக மறதி,  சந்தேகம், திருட்டுத்தனமான அனைத்து காரியங்களும்.
  • மனம், மன ஓட்டம், உடலின் ரத்த ஓட்டம், வயதில் மூத்த பெண்கள், பயணம், உணவுப்பொருட்கள், நீர், நீர்வழி தொழில்கள் தண்ணீர் வியாபாரம், பால் வியாபாரம், அன்றாடம்  விற்கப்படும் பழங்கள், உடல் பலவீனம், தேய்மானம், ஞாபகமறதி, நுரையீரல், சளி தொடர்பான உபாதைகள், கெட்ட நடத்தை, திருட்டு குணம் போன்றவை சந்திரனின் காரகத்துவங்கள்

மேற்கொண்ட சந்திரனின் காரகங்களை எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை தசா-புத்திகள் மூலம் நிர்ணயம்  செய்யும். மேலும் முக்கிய விபரங்கள், கணிதம், திருவிழாக்கள், ஆலயங்களில் தெய்வ வழிபாடு, பஞ்சாங்கம் போன்றவை சந்திரனின் திதி  நட்சத்திரத்தை கொண்டு கணக்கிடப்படுகிறது.

பாலினம்- பெண் 

 நிறம் -வெள்ளை 

 உலோகம்-  ஈயம்

தெய்வம்-  பார்வதி 

கிரக ஸ்தானம்-  திருப்பதி வெங்கடாசலபதி

நவரத்தினம்- முத்து

புஷ்பம்-  வெள்ளல்லி 

சமித்து- முறுக்கு

 நவதானியம்- நெல்

சுவை-  இனிப்பு

நோய்- சிலேத்துமம்

திசை- வடமேற்கு

பஞ்சபூதம்- நீர்

ஆகியவை எல்லாம் சந்திரனின் காரகங்கள் ஆகும். 

அடுத்ததாக செவ்வாயின் காரகங்கள்   தெரிந்துகொள்ள கீழே  கொடுக்கப்பட்டுள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

Jathagam parpathu eppadi in tamil :


நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள்  லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.