How to Know learn kp astrology Sublord Calculation
KP astrology Sublord Theory : (உப நட்சத்திரம்)
ராசி மண்டலத்தில் உள்ள நமது பூமியானது ஒருமுறை தன்னைத் தானே சுற்றி கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்த 24 மணி நேரத்தில் உள்ள சூரிய உதயத்தில் அடிப்படையில் லக்னம் கணிக்கப்படுகிறது. ராசி மண்டலத்தின் அளவு 360 டிகிரி எனவும் ஒரு ராசியின் அளவு 360/12 = 30 டிகிரி எனப்படும். Learn kp astrology tamil in this websites.
கே பி ஜோதிட முறையில் முதலில் நாம் கணக்கிட வேண்டியது லக்னம் 1 டிகிரியை கடக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை அறிய வேண்டும். ஒரு ராசியை லக்னம் கடக்க 2 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே 2 மணி நேரத்தை நிமிடமாக மாற்றுவோம்.
2 மணி நேரம் x 60 நிமிடங்கள் = 120 நிமிடங்கள் ,
120 நிமிடங்கள் / 30 டிகிரி = 4 நிமிடங்கள்
1 டிகிரி = 4 நிமிடங்கள்
லக்னம் ஒரு டிகிரி கிடைப்பதற்கு 4 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.
லக்னத்தின் அடிப்படையில் நட்சத்திரத்தை கடக்கும் நேரம்:
லக்னம் ஒரு நட்சத்திரத்தை கடக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை பார்ப்போம்.
ஒரு நட்சத்திரத்தின் அளவு 13° 20′ 00” ஆகும். இதை நான்கு நிமிடங்கள் உடன் பெருக்கவும்.
13° 20′ 00” x 4 = 0h 53m 20s
லக்னம் ஒரு நட்சத்திரத்தை கடக்க 53 நிமிடங்கள் 20 நொடிகள் எடுத்துக் கொள்கிறது.
லக்னத்தின் அடிப்படையில் பாதத்தை கடக்கும் நேரம் :
லக்னம் ஒரு பாதத்தை கடக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை பார்ப்போம்.
ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாகங்களில் ஒரு பாதத்தின் அளவு 3° 20′ 00” ஆகும்
ஒரு பாதத்தின் அளவு 3° 20′ 00” ஆகும். இதை நான்கு நிமிடங்கள் உடன் பெருக்கவும்.
3° 20′ 00” x 4 = 0h 13m 20s
லக்னம் ஒரு பாதத்தை கடக்க 13 நிமிடங்கள் 20 நொடிகள் எடுத்துக் கொள்கிறது.
Jathagam parpathu eppadi in tamil :
கே.பி ஜோதிடத்தில் பலன் கூறும் முறை :
பாரம்பரிய ஜோதிடத்தில் முதலில் நட்சத்திரத்தை கொண்டு பலன் சொல்லப்பட்டது. பிறகு நட்சத்திரத்தை நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு பலன் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது ஒரு பாதத்தின் அளவு 13 நிமிடங்கள் 20 நொடிகள் ஆகும். இந்த 13 நிமிடங்கள் 20 நொடிகள் இடைப்பட்ட நேரத்தில் ஒரு குழந்தை பிறக்கும் போது நவாம்சத்தை கொண்டு பலன் கூறப்படுகிறது. ஆனால் கேபி ஜோதிடத்தில் 30 நொடிகள் கூட பிறக்கும் குழந்தைகளின் ஜாதகப் பலனை வேறுபடுத்தி காட்ட முடியும்.
கேபி ஜோதிட முறையில் சூரியனை உதயத்தின் அடிப்படையில் லக்னம் மற்றும் பாவங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. சந்திரனின் நகர்வுகளை கொண்டுதான் தசா-புத்திகள் கணக்கிடப்படுகிறது. sublord table pdf
பொதுவாக ஜோதிடத்தில் நினைவில் கொள்ளவேண்டியது.
சூரியன் என்றால் விதியின் பலனை நிர்ணயிக்கும்
சந்திரன் என்றால் மதியின் செயல்களை நிர்ணயிக்கும்
“விதி என்றால் பாவங்கள், மதி என்றால் தசாபுத்திகள்”
Calculation of subload table :
கேபி ஜோதிட முறையில் நட்சத்திர அதிபதியை 9 உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதை உப நட்சத்திரம் (Sub lord) என்று அழைக்கிறோம். இதை கீழ்கண்டவாறு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. learn kp astrology
ஒரு நட்சத்திரத்தின் அளவு = 13°20′
விம்சோத்தரி தசா வருடங்கள் = 120 வருடங்கள்
குறிப்பு : டிகிரி கணக்கீட்டை சயின்டிஃபிக் கால்குலேட்டர் (scientific calculator) மூலம் கணக்கிட வேண்டும்.
கிரகம் | தசை வருடம்/120 | நட்சத்திர அளவு | உப நட்சத்திர அளவு |
---|---|---|---|
சூரியன் | 6/120 | 13° 20′ 00” | 0°-40′-00″ |
சந்திரன் | 10/120 | 13° 20′ 00” | 1°-06′-40″ |
செவ்வாய் | 7/120 | 13° 20′ 00” | 0°-46′-40″ |
ராகு | 18/120 | 13° 20′ 00” | 2°-00′-00″ |
குரு | 16/120 | 13° 20′ 00” | 1°-46′-40″ |
சனி | 19/120 | 13° 20′ 00” | 2°-06′-40″ |
புதன் | 17/120 | 13° 20′ 00” | 1°-53′-20″ |
கேது | 7/120 | 13° 20′ 00” | 0°-46′-40″ |
சுக்கிரன் | 20/120 | 13° 20′ 00” | 2°-13′-20″ |
Total | 13° 20′ 00” |
கேபி முறையில் நட்சத்திர அதிபதியை திசை என்று அழைக்கிறோம். தசையின் உட்பிரிவை புத்தியாகவும், புத்தியின் உட்பிரிவை அந்தரமாகவும், அந்தரத்தின் உட்பிரிவை சூட்சமமாகவும் அழைக்கிறோம். KP astrology lessons
- 5 நட்சத்திர அதிபதி ( star lord ) – தசை
- 6 உப நட்சத்திர அதிபதி (sub lord) – புத்தி
- 7 உப உப நட்சத்திர அதிபதி (sub sub lord) – அந்தரம்
- 8 உப உப உப நட்சத்திர அதிபதி (sub sub sub lord) – சூட்சமம்
- 9 உப உப உப நட்சத்திர அதிபதி (sub sub sub lord) – பிரானா
கீழே உள்ள வரைபடத்தின் மூலம் உப நட்சத்திரங்களின் பிரிவுகளை நீங்கள் புரிந்து கொள்ளும்படி விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. sublord table

கேபி ஜோதிடத்தில் 1 முதல் 249 வரை உள்ள உப நட்சத்திர (Sub lord table) அட்டவணையை தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்களின் காரகத்துவங்கள் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.