How to Learn 5th house in astrology Tamil – KP system
லக்னத்தில் இருந்து ஐந்தாம் பாவம் : 5th bhavam
ஐந்தாம் பாவம் என்பது புத்திர ஸ்தானம் என்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. ஐந்தாம் பாவத்தைக் கொண்டு கீழ்கண்ட காரகங்கள் சொல்லப்படுகிறது. 5th house astrology பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஐந்தாம் பாவத்தில் உள்ள உடல் உறுப்புகள்:
இதயம்
முதுகுப்பகுதி
பாலியல் ஹார்மோன்கள்
உயிர் அணுக்கள்
மதிநுட்பம், ஒரு உயிரை உருவாக்கும் சக்தி
வரைபடம் :

மேற்கொண்ட வரைபடத்தில் ஜாதகரின் லக்னம் தனுசு ராசியில் விழுந்துள்ளது. தனுசு லக்னத்தில் இருந்து ஐந்தாவது ராசி மேஷ ராசி ஆகும். எனவே கேபி ஜோதிடத்தின்படி மேஷ ராசி என்பது ஐந்தாம் பாவமாகும். ஒவ்வொரு பாவத்திற்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன. ஐந்தாவது பாவத்தின் காரகத்துவங்கள் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் பாவத்தின் காரகங்கள் :
- கலைகளில் ஆர்வம், உடலை சிறிது கூட வருந்தாமல் இருத்தல்
- சிற்றின்பத்தில் அதிக நாட்டம், கமிஷன், கவர்ச்சிக்கு மயங்குதல்
- பொழுதுபோக்கு விஷயங்கள், அழகுபடுத்திக் கொள்ளுதல்
- ரசனை, உல்லாசம், விளையாட்டு, ஆழ்ந்த சிந்தனை
- ஆரோக்கியமான உடல்வாகு, மற்றவர்களுடன் இணக்கமாக இருந்து
- பகையை வளர்த்காத்திருத்தல்
- கடன் அடைத்தல் அல்லது கடன் வாங்காது இருத்தல்
- எதையும் உணர்வு ரீதியாக ஈடுபடும் செயல், விருந்தோம்பல்
- கேளிக்கைகள், சூதாட்டம், சினிமா, நாடகம், இசை, கச்சேரி
- மந்திரம் ஜபித்தல், தெய்வீக பரசுராம், மிகப்பெரிய இலக்கண படைப்புகள்,
- எதையும் அளவுக்கு அதிகமாக வர்ணனை செய்தல், புண்ணியம், பாவம் போன்றவற்றை வேறுபடுத்தி உணர்தல்,
- அன்னதானம், உடை, தானம், மருத்துவ தானம், இயற்கை
- பாச உணர்வு, தமது செயல்களால் மற்றவர்களை மகிழ்ச்சி அடையச் செய்தல்
- எதையும் உழைக்காமல் பெறுதல்,
- காதல், இன்ப உணர்வுகளை அதிக அளவு நுகர்தல்
- எதையும் உணர்வு பூர்வமாக சிந்தித்தல், கற்பனை கலந்த உணர்வுகள்
போன்ற காரகங்களை அனைத்தும் நன்றாக அனுபவிக்க முடியும் . ஐந்தாம் பாவம் கெட்டுவிட்டால் ஜாதகரால் மேற்கொண்ட காரகங்களை அனுபவிக்க முடியாமல் காரகங்கள் அனைத்தும் எதிர்மறையாக செயல்படும். 5th house astrology
1 to 12 பாவங்களின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.