How to know Naligai in tamil astrology
நாழிகை என்றால் என்ன?
ஜோதிடத்தில் அக்காலகட்டங்களில் நாழிகை, வினாடி முறைகளில் ஜாதகம் கணிக்கப்பட்டது. இது தற்போது கூட நடைமுறையில் ஆங்காங்கே உள்ளது. ஆனால் பெரும்பாலான ஜாதகர்கள் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் மணி, நிமிடம் ஆகியவற்றில் ஜாதகம் எழுதப்படுகிறது. மேலும் சாப்ட்வேர் முறைகளும் மணி, நிமிடம் ஆகியவற்றில் கணக்கிடப்படுகிறது. Naligai in tamil லில் மிக எளிமையான முறையில் விளக்குகிறேன்.
நாழிகை என்றால் சந்திரன் முக்கிய காரணம் ஆகிறார். அதாவது சந்திரன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் செல்வார். அது நமது காலண்டர்களில் எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரம் எழுதியிருக்கும். அதை நாழிகையில் குறிப்பிட்டு இருப்பார்கள். சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வர 27 நாட்கள் ஆகிறது. இந்த 27 நாட்களிலும் 27 நட்சத்திரத்தை கடந்து செல்கிறது. அதாவது 360 டிகிரி உள்ள ராசி மண்டலத்தில் ஒரு நட்சத்திரத்தின் அளவு 13 டிகிரி 20 மினிட்ஸ் என்ற விகிதத்தில் சந்திரன் கடந்து செல்கிறது. மேலும் இந்த 13 டிகிரி 20 மினிட்ஸ் நட்சத்திரத்தை கடக்க நாழிகைகள் குறிப்பிடும்போது 60 நாளிகை ஆகிறது. அதை மணிக்கணக்கில் குறிப்பிடும்போது 24 மணி நேரம் ஆகிறது. இந்த கணக்கு முறையை விரிவாக பார்க்கலாம்.

பழைய கணக்கு :
1 நாள் = 60 நாளிகை
60 வினாடி = 1 நாளிகை
புதிய கணக்கு :
1 நாள் = 24 மணி நேரம்
1 நிமிடம் = 60 நோடி
Naligai to Time :
60 நாளிகை = 24 மணி நேரம்
1 நாளிகை = 24 நிமிடம்
1 வினாடி = 0.40 நிமிடம்
2½ வினாடி = 1 நிமிடம்
நாளிகை என்பது சூரிய உதயத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் ஆகும் நேரம் முதல் அடுத்த நாள் சூரியன் உதயம் ஆகும் வரைக்கும் ஒரு நாளிகை ஆகும். இதை நாம் பஞ்சாங்கத்தில் சூரிய உதயம் நேரம் தெரிந்துகொள்ளலாம்.
உதாரணமாக ஒரு குழந்தை 14.05.1982 ல் சென்னையில் பிறந்துள்ளது என்று எடுத்துக்கொள்வோம். குழந்தை பிறந்த நேரம் 30 நாழிகை 16 வினாடி என்று எடுத்துக்கொள்வோம். இது எவ்வாறு மணிக்கணக்கில் மாற்றுவது என்று பார்க்கலாம்.
பஞ்சாங்கத்தின் படி 14.05.1982 ல் சூரிய உதயமானது 5 மணி 47 நிமிடம் ஆகும்
30 நாளிகை x 24 நிமிடம் = 720 நிமிடங்கள்
16 வினாடி x 0.40 நிமிடம் = 6.40 நிமிடங்கள்
மொத்தம் 726.40 நிமிடங்கள்
726.40/60 = 12.10666
12 மணி (0.1066 x 60)
12 மணி 6 நிமிடம்
ஆனால் தற்போதைய உள்ள மணிக்கணக்கு முதல் நாள் Midnight 12.00 AM மறுநாள் 12:00 AM ஒரு நாள் கணக்கு.
இதனால் சூரிய உதயத்தை இந்த 12 மணி 6 நிமிடத்தை கூட்ட வேண்டும். இதை கூட்டினால் 17 மணி 53 நிமிடம் வருகிறது. இது ரயில்வே டைம் ஆக வருகிறது. இதை நடைமுறையில் பிற்பகல் 5 மணி 53 நிமிடம் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறாக Naligai to time மாற்றப்படுகிறது. Naligai in tamil லில் தெரிந்து பயன் பெறுவீர் நன்றி.